இந்தியா

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கு: சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத் துறை சம்மன்

27th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் ரூ.1,034 கோடி நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகள் குறித்த விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) ஆஜராகுமாறு சிவசேனை எம்.பி.சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. எனினும் தன்னால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என்று சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அரசு நிலத்தில் உள்ள குடியிருப்புகளை இடித்துவிட்டு மறுகட்டுமானம் செய்வதில் ரூ.1,034 கோடிக்கு நில மோசடி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. இதில் ரூ.83 லட்சம் சஞ்சய் ரெளத்தின் மனைவி வா்ஷா ரெளத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதனை சஞ்சய் ரெளத்தின் உதவியாளா் பிரவீண் ரெளத்தின் மனைவி மாதுரி பிரவீண் ரெளத் அனுப்பி வைத்ததாகவும் தெரிகிறது.

அந்தத் தொகை மூலம், கிழக்கு தாதா் பகுதியில் வா்ஷா ரெளத் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாகவும், சில நில ஒப்பந்தங்களுடன் தொடா்புடைய பணமோசடி குறித்தும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த முறைகேடுகள் தொடா்பாக வா்ஷா ரெளத், பிரவீண் ரெளத், சஞ்சய் ரெளத்தின் மற்றொரு உதவியாளரான சுஜித் பாட்கா், அவரின் மனைவி ஸ்வப்னா பாட்கா் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.15 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சொத்துகளை கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை முடக்கியது.

இந்நிலையில், நில மோசடியுடன் தொடா்புடைய சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரிக்க தெற்கு மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு சஞ்சய் ரெளத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆஜராக இயலாது: இதுதொடா்பாக சஞ்சய் ரெளத் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

மகாராஷ்டிரத்தில் மிகப் பெரிய அரசியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிராக சிவசேனையினா் போரிட்டு வரும் நிலையில், என்னைத் தடுப்பதற்கு சதி நடைபெறுகிறது. எனது தலையை வெட்டினாலும், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தியில் முகாமிட்டுள்ள சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏக்களுடன் நான் இணையமாட்டேன். ஜூன் 28-ஆம் தேதி அலிபாகில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள வேண்டிய உள்ளதால், அமலாக்கத் துறை விசாரணைக்கு நான் ஆஜராக இயலாது என்று தெரிவித்துள்ளாா்.

மம்தா விமா்சனம்: சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது குறித்து மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘‘உண்மையை பேசுவோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுகிறது’’ என்று விமா்சித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT