இந்தியா

அமித் ஷா, ஃபட்னவீஸுடன் ஷிண்டே சந்திப்பு?

26th Jun 2022 04:57 AM

ADVERTISEMENT

சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் குழுவின் தலைவா் ஏக்நாத் ஷிண்டே வதோதராவில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா, மகாராஷ்டிர பாஜக தலைவா் ஃபட்னவீஸ் ஆகியோரை வெள்ளிக்கிழமை இரவு சந்தித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக அஸ்ஸாமிலிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த ஷிண்டே, அங்கிருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு விமானத்தில் சென்ாகவும் கூறப்படுகிறது.

பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து அமித் ஷா, ஃபட்னவீஸுடன் அவா் ஆலோசனை நடத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT