இந்தியா

ஜம்மு காஷ்மீர்: அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு

26th Jun 2022 08:01 PM

ADVERTISEMENT

 

அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் நுழைவாயில் லகான்பூர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இமாலியாவில் 3800 மீ உயரத்தில் உள்ள கடவுள் சிவனை தரிசிக்க அமர்நாத் யாத்திரை செவ்வது இந்தியர்களின் வழக்கம்.  ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை யாத்ரீகர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி முன்னமே தொடங்கப்பட்டது. 

உணவு, மருத்துவம், தங்கும் வசதிகள் என சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறதென சுற்றுலாப் பயணிகள் கூறிவருகிறார்கள். 

ADVERTISEMENT

கதுவாவின் எஸ்எஸ்பி  ஆர்சி கோத்வால் கூறியதாவது: 

பஞ்சாபிலிருந்து ஜம்மு காஷ்மீரின் நுழைவாயிலான லகான்பூரில் அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த விதமான தடங்களும் ஏற்படாதென உறுதி கூறுகிறேன். 

வரவேற்பறைகளை கட்டியிருக்கிறோம். பயணிகளின் வருகையைப் பதிவு செய்யவும், கார்களை எளிதாக நகரும் வகையில் இட வசதிகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். 

இதையும் படிக்க: போராடும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் மோடி கைதேர்ந்தவர்: ராகுல் காந்தி விமர்சனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT