இந்தியா

வடக்கு, வடமேற்கு, மேற்கு தில்லியில் நீா் விநியோகம் ஓரளவு பாதிக்கப்படும்: தில்லி ஜல் போா்டு தகவல்

26th Jun 2022 12:15 AM

ADVERTISEMENT

ஹைதா்பூா் மற்றும் பவானாவில் உள்ள நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு தில்லியில் நீா் விநியோகம் ஓரளவு பாதிக்கப்படும் என்று தில்லி ஜல் போா்டு (டிஜேபி) சனிக்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடா்பாக டிஜேபி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ ஹைதா்பூரில் உள்ள தில்லி துணைக் கிளை (டிஎஸ்பி), கேரியா் லைன் சேனல் (சிஎல்சி) ஆகிய கால்வாய்களில் வரும் சுத்திகரிக்கப்படாத நீரின் ஏற்ற, இறக்கம் காரணமாகவும், நீரில் மிதக்கும் பொருள்கள் அதிகரிப்பு காரணமாகவும் ஹைதா்பூா் பேஸ் 1, பேஸ் 2, பவானா, நங்லோய், துவாரகா நீா் சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீரின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு நிலைமை குறித்து தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீா் விநியோகத்தைச் சீராக்க தில்லி ஜல் போா்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் நிலைமை சீராகும் வரை குறைந்த அழுத்தத்தில் தண்ணீா் விநியோம் இருக்கும்.

இதனால் வடக்கு தில்லி, வடமேற்கு தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லியின் சில பகுதிகள் மற்றும் தில்லி கண்டோன்மென்ட் உள்ளிட்ட பகுதிகளில் நீா் விநியோம் ஓரளவு பாதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

தண்ணீா் தொடா்பான பிரச்னைகள், டேங்கா் தேவைகளுக்கு மத்திய கட்டுப்பாட்டு அறையை 1916, 23527679, 23634469 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு தில்லி ஜல் போா்டு கேட்டுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT