இந்தியா

கேரளத்தில் ராகுல்அலுவலகத்தில் தாக்குதல்: சீதாராம் யெச்சூரி கண்டனம்

26th Jun 2022 12:17 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், வயநாட்டில் ராகுல் காந்தி எம்.பி. அலுவலகம் மீது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பு (எஸ்எஃப்ஐ) தாக்குதல் நடத்தியதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘வயநாட்டில் நடைபெற்ற நிகழ்வு ஏற்கத்தக்கது அல்ல. அதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த சம்பவத்துக்கு கேரள முதல்வரும் கண்டனம் தெரிவித்துள்ளாா். இந்தப் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டோா் மீது மாநில போலீஸாா் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டனா்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT