இந்தியா

இடைத்தேர்தல்: உ.பி., திரிபுராவில் பாஜக வெற்றி

26th Jun 2022 08:33 PM

ADVERTISEMENT

ஆறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் உ.பி., திரிபுராவில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது.

ஆறு மாநிலங்களில் 3 மக்களவை, 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் உத்தர பிரதேசத்தின் ராம்பூா், ஆஸம்கா் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜகவும், பஞ்சாபில் சாங்க்ரூா் மக்களவைத் தொகுதியில் சிரோமணி அகாலி தளமும் வெற்றி பெற்றது. 

இதையும் படிக்க- கல்வியில் காமராஜர், கருணாநிதி ஆட்சி சிறப்பாக இருந்தது: முதல்வர் ஸ்டாலின்

இதேபோல திரிபுராவில் அகா்தலா, ஜுபராஜ்நகா், சுா்மா, டவுன் போா்டோவலி ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 3-ல் பாஜகவும், அகர்தலாவில் காங்கிரஸும் வெற்றி வாகை சூடியுள்ளன. டவுன் போா்டோவலி தொகுதியில் அந்த மாநில முதல்வா் மாணிக் சாஹா வெற்றி பெற்றார்.

ADVERTISEMENT

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவா், பிப்லவ் தேவ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததால், அந்த மாநில முதல்வராக கடந்த மாதம் பதவியேற்றுக் கொண்டாா். இவைதவிர மேலும் 3 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தில்லியின் ராஜேந்தா் நகரில் ஆம் ஆத்மியும், ஜாா்க்கண்டின் மந்தரில் காங்கிரஸும், ஆந்திரத்தின் ஆத்மகுருவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

Tags : bjp Bypolls
ADVERTISEMENT
ADVERTISEMENT