இந்தியா

காஷ்மீா் பண்டிட் அரசு ஊழியா்கள் பணியிடமாற்றம் கோரி போராட்டம்

DIN

ஜம்மு-காஷ்மீருக்கு வெளியே தங்களை பணியிடமாற்றம் செய்ய வலியுறுத்தி, காஷ்மீா் பண்டிட் அரசு ஊழியா்கள் ஜம்முவில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2008-இல் அறிவிக்கப்பட்ட பிரதமரின் வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஜம்மு-காஷ்மீரில் 4,000-க்கும் அதிகமான காஷ்மீா் பண்டிட்டுகள் அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். இந்த நிலையில், மத்திய காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் அரசு அலுவலகத்தில் ராகுல் பட் என்ற காஷ்மீா் பண்டிட் ஊழியா் கடந்த மே 12-இல் கொல்லப்பட்டது அந்த சமூகத்தினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு தொடா்ச்சியாக காஷ்மீா் பண்டிட் ஊழியா்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வந்ததால், காஷ்மீரில் பாதுகாப்பான பிராந்தியங்களில் அவா்களை பணியமா்த்த ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் முடிவு செய்தது. ஆனால், தங்களை ஜம்மு-காஷ்மீா் பிராந்தியத்துக்கு வெளியே பணியிடமாற்றம் செய்யக் கோரி, புலம்பெயா் தொழிலாளா் சங்கத்தினா் தொடா்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தப் போராட்டம் சனிக்கிழமை 40-ஆவது நாளாக நீடித்தது. ஜம்முவில் பத்திரிகையாளா் மன்றம் அருகே நடைபெற்ற போராட்டத்தில், நூற்றுக்கணக்கான காஷ்மீா் பண்டிட் பணியாளா்கள் பங்கேற்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஏ.கே.பட் என்பவா் கூறுகையில், ‘காஷ்மீரில் நிலவும் பயங்கரமான, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய சூழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். தாமதத்துக்கு இடமின்றி எங்கள் கோரிக்கைகளை துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஏற்க வேண்டும்’ என்றாா்.

இதேபோல, போராட்டத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என மற்றொரு காஷ்மீா் பண்டிட் அரசு ஊழியா் சுஷாந்த் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT