இந்தியா

அதிருப்தி எம்எல்ஏ-க்களின் விடுதிக் கட்டணங்களை செலுத்துவது யார்? என்சிபி கேள்வி

25th Jun 2022 11:32 AM

ADVERTISEMENT


அசாமில் முகாமிட்டுள்ள மகாராஷ்டிர அதிருப்தி எம்எல்ஏ-க்களின் விடுதிக் கட்டணங்களை செலுத்துவது யார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் கேள்வியெழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் பெரும்பாலான சிவசேனை எம்எல்ஏ-க்கள் அதிருப்தி எம்எல்ஏ-வான ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக அசாமில் முகாமிட்டுள்ளனர். குஜராத் மாநிலம் சூரத்திலிருந்த அவர்கள் தற்போது அசாம் மாநிலத்திலுள்ள குவஹாட்டியில் உள்ளனர். இதனால், மகாராஷ்டிரத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் நிலைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதையும் படிக்கதிரௌபதி முர்முவுக்கு ஆதரவு: மாயாவதி அறிவிப்பு

இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் மகேஷ் தபாசே, அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கான செலவுக் கட்டணங்களை செலுத்துவது யார் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது: 

"சூரத்திலும், குவஹாட்டியிலும் விடுதிக் கட்டணங்களைச் செலுத்துவது யார்? தனி விமானங்களுக்கான செலவை ஏற்பதும் யார்? குதிரைப் பேரத்திற்கான விலை ரூ. 50 கோடி என்பது உண்மைதானா? அமலாக்கத் துறையும் வருமான வரித் துறையும் செயல்படத் தொடங்கினால், கருப்புப் பணத்திற்கான மூலதனம் வெளிப்பட்டுவிடும்" என்றார் மகேஷ் தபாசே.
 

Tags : Maharashtra
ADVERTISEMENT
ADVERTISEMENT