இந்தியா

ராகுல் அலுவலக தாக்குதல் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல: யெச்சூரி

25th Jun 2022 12:06 PM

ADVERTISEMENT


வயநாட்டில் ராகுல் காந்தி அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி, மலைப் பகுதிகளில் காடுகளைச் சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்படுத்த தவறிவிட்டதாகக் கூறி, அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் (எஸ்எஃப்ஐ) நேற்று (வெள்ளிக்கிழமை) பேரணி சென்றனர்.

இதையும் படிக்கஅதிருப்தி எம்எல்ஏ-க்களின் விடுதிக் கட்டணங்களை செலுத்துவது யார்? என்சிபி கேள்வி

அப்போது சுமார் 100 பேர் வரை எம்.பி. அலுவலகத்தில் நுழைந்து அங்கிருந்த மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி, அலுவலகத்தை சூறையாடினர். இதில் தொடர்புடைய 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக, சீதாராம் யெச்சூரி இன்று (சனிக்கிழமை) தெரிவித்ததாவது:

"வயநாட்டில் நிகழ்ந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என நாங்கள் தெரிவித்துள்ளோம். அதைக் கண்டித்துள்ளோம். கேரள முதல்வரும், கேரள அரசும் இதைக் கண்டித்துள்ளது. இந்தப் பொறுப்பற்றச் செயலுக்குக் காரணமானவர்கள் மீது காவல் துறையினர் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டனர்" என்றார் அவர்.

முன்னதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் (காங்கிரஸ்) விடுத்துள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கு கட்டமைக்கப்பட்ட மாஃபியாவாக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT