இந்தியா

அடேங்கப்பா! போலியாக கோயில் இணையதளம் தொடங்கி பூசாரிகள் செய்த மோசடி

25th Jun 2022 04:02 PM

ADVERTISEMENT


கர்நாடக மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் உள்ள தேவலகனாபூர் கோயிலின் பூசாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து, கோயில் பெயரில் போலியான இணையதளம் ஒன்றைத் தொடங்கி பல கோடி ரூபாயை மோசடி செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோயிலுக்கு நன்கொடை என்ற பெயரில், பக்தர்களிடமிருந்து பல கோடி ரூபாயை பூசாரிகள் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

வட கர்நாடகத்தின் கங்காபூர் நதிக்கரையில் அமைந்துள்ளது இந்த கோயில், இந்தக் கோவிலுக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாமல், மகாராஷ்டிரம், தெலங்கான மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். ஸ்ரீ தத்தாத்ரேயா இக்கோயிலின் முக்கிய கடவுளாக வழிபடப்படுகிறார்.

ADVERTISEMENT

இந்தக் கோயிலில் பணியாற்றும் பூசாரிகள் சிலர், கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த கோயிலின் பெயரில் சுமார் 8 இணையதளங்களை உருவாக்கி, பக்தர்களிடமிருந்து வழிபாட்டுக் கட்டணம், நன்கொடை என இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நன்கொடைகள் அனைத்தும் பூசாரிகளின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் பல்வேறு பூஜைகளை மேற்கொள்ள ரூ.10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்தும் உள்ளனர்.

அண்மையில் கோயில் நிர்வாக கணக்கு வழக்குகளை ஆராய்ந்த் போது, இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், கோயில் உண்டியல்களிலிருந்து வரும் பணத்தையும் பூசாரிகளே திருடியிருப்பதும் அங்கிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளதாகக் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT