இந்தியா

திருமாவளவனின் தாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

25th Jun 2022 03:18 PM

ADVERTISEMENT

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது தாயாரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விசாரித்தறிந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள், தனது தாயாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (25-06-2022) காலை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவனை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, அவரது தாயாரின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்து, விரைவில் அவர் முழுமையாக குணம் பெற்று வீடு திரும்ப தனது விருப்பத்தை தெரிவித்தார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT