இந்தியா

கர்நாடகத்தில் தலித் இளைஞரை மாட்டு சாணத்தை உண்ண வைத்த கொடூரம்

25th Jun 2022 04:00 PM

ADVERTISEMENT

தலித் இளைஞரை முற்பட்ட சாதியினர் கட்டாயப்படுத்தி மாட்டு சாணத்தை உண்ண வைத்த சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் கடாக் மாவட்டத்தில் உள்ள மேனசகி கிராமத்தைச் சேர்ந்த 26 வயதான தலித் இளைஞர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு வந்த முற்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் அந்த இளைஞரின் சாதியைக் குறிப்பிட்டு தகாத வார்த்தைகள் பேசியதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அவர் அவர்களைத் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முற்பட்ட சாதியினர் அந்த இளைஞரை அடித்து துன்புறுத்தியதுடன் அவரைக் கட்டாயப்படுத்தி மாட்டு சாணத்தை உண்ணக் கொடுத்துள்ளனர்.

இதையும் படிக்க | தாணேவைத் தொடர்ந்து மும்பையிலும் 144 தடை!

இதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் முற்பட்ட சாதியைச் சேர்ந்த 5 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலித் இளைஞர் மீதும் முற்பட்ட சாதியினர் புகார் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மகாராஷ்டிரத்தில் 40 எம்எல்ஏக்கள், 70 அறைகள், 3 விமானங்கள்: எவ்வளவு செலவு?

கர்நாடக மாநிலத்தில் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இத்தகைய குற்றச்செயல்கள் பதிவாகி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தலித் இளைஞரை காவல்துறை ஆய்வாளர் ஒருவர் சிறுநீரைக் குடிக்க வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT