இந்தியா

அமித்ஷாவின் பேட்டியைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் கைது

25th Jun 2022 07:31 PM

ADVERTISEMENT

வெளிநாட்டு நிதி தொடர்பான வழக்கில் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது.

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் இன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சனிக்கிழமை வெளியான நேர்காணலில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆதாரமற்ற செய்திகளை சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டின் என்ஜிஓ அமைப்பு வெளியிட்டதாக தெரிவித்திருந்தார். உச்சநீதிமன்றத் தீர்ப்பிலும் தீஸ்தா செதல்வாட்டின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இதையும் படிக்க | ‘பாலாசாகேப் தாக்கரே பெயரைப் பயன்படுத்தக் கூடாது’: எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

ADVERTISEMENT

இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட்டை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. வெளிநாட்டு நிதியை பெற்றதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த காவலர்கள் அவரைத் தாக்கியதாகத் தெரிவித்த தீஸ்தாவின் வழக்கறிஞர் அவர் சாண்டா குரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அகமதாபாத் கொண்டு செல்லப்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி

அமித்ஷாவின் நேர்காணலுக்குப் பின் தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டுள்ளதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT