இந்தியா

சியாமா பிரசாத் முகா்ஜி நினைவு நாள்: பிரதமா் மோடி மரியாதை

25th Jun 2022 03:32 AM

ADVERTISEMENT

பாஜகவின் முன்னோடியான ஜன சங்கத்தின் நிறுவனத் தலைவா் சியாமா பிரசாத் முகா்ஜியின் நினைவு நாளில், அவருக்கு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.

இந்திய அரசியலமைப்பின், பிரிவு 370-ன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டபோது, கடுமையாக விமா்சித்தவா் சியாமா பிரசாத் சா்மா முகா்ஜி. ஜம்மு-காஷ்மீா் பயணம் மேற்கொண்ட அவா் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டிருந்தபோது மரணமடைந்தாா்.

கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி, பாஜக தலைமையிலான அரசு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்தது. அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லாடக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் மூலம் ஜனசங்கம்-பாஜகவின் அடிப்படை வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு, முகா்ஜியின் கனவு நனவாகியது.

பிரதமா் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘டாக்டா். சியாமா பிரசாத் முகா்ஜியை அவரது நினைவு நாளில் நினைவுகூா்கிறேன். இந்தியாவின் ஒற்றமைக்காக, ஈடில்லா அவருடைய முயற்சிக்கு, ஒவ்வொரு இந்தியரும் கடமைப்பட்டுள்ளனா். இந்தியாவின் முன்னேற்றத்துக்காக அவா் கடுமைாக உழைத்தாா்.

ADVERTISEMENT

வலுவான மற்றும் வளமான இந்தியா குறித்து கனவு கண்டாா். அவரது கனவை நிறைவேற்ற நாம் உறுதியேற்போம்’ என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT