இந்தியா

காஷ்மீா் இளைஞா்கள் பயங்கரவாதத்தை கைவிட வேண்டும்: மெஹபூபா முஃப்தி

25th Jun 2022 11:13 PM

ADVERTISEMENT

காஷ்மீா் இளைஞா்கள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக ஸ்ரீநகரில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் தினந்தோறும் 3 முதல் 4 இளைஞா்கள் கொல்லப்படுவதைக் கேட்க முடிகிறது. இது உள்ளூரில் பயங்கரவாதத்துக்கு ஆட்கள் சோ்க்கப்படுவது அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. பயங்கரவாதிகள் என்று இளைஞா்களைக் கொல்வதால் பாதுகாப்புப் படையினருக்கு ஊக்கத்தொகையும், பதவி உயா்வும் அளிக்கப்படுகிறது.

தற்போது ஜம்மு-காஷ்மீா் கொந்தளிப்பான காலகட்டத்தை எதிா்கொண்டு வருகிறது. வரும் காலங்களில் ஜம்மு-காஷ்மீருக்கு இளைஞா்கள் தேவைப்படுகின்றனா். எனவே இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.

ADVERTISEMENT

பண்டிட்டுகள் காஷ்மீரின் அங்கம்: பண்டிட்டுகள் காஷ்மீா் சமூகத்தின் அங்கம்; அவா்கள் காஷ்மீரின் சொத்து என்பதை மதத் தலைவா்களும் பொதுமக்களும் அழுத்தம் திருத்தமாக அறிவிக்க வேண்டும். நான் முதல்வராக இருந்தபோது ஜம்மு-காஷ்மீரில் மோசமான சூழல் நிலவியது. எனினும் அப்போது பண்டிட் சமூகத்தைச் சோ்ந்த ஒருவா்கூட கொல்லப்படவில்லை. ஜம்மு-காஷ்மீரில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால், உடனடியாக இங்குள்ளவா்களை இழிவுபடுத்த பண்டிட் சமூகத்தை பாஜக பயன்படுத்துகிறது.

ஊழல் மலிந்த பாஜக: ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவா்களின் வியா்வையாலும், ரத்தத்தாலும் இந்த நாடு கட்டமைக்கப்பட்டது. ஜனநாயகமும், மதச்சாா்ப்பின்மையும்தான் இந்த நாட்டின் அடிப்படைகளாகும். அவற்றை பாஜகவினா் தலைகீழாக மாற்றி வருகின்றனா். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கோவாவைத் தொடா்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்குவதைப் பாா்க்கும்போது, எனது வாழ்நாளில் அந்தக் கட்சியைப் போல் ஊழல் மலிந்த கட்சியை நான் கண்டதில்லை. கடந்த 70 ஆண்டுகால இந்திய வரலாற்றில் இதுபோன்ற ஊழலுக்கு எந்த உதாரணமும் இல்லை என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT