இந்தியா

முதல்வராக நியமிக்க வலியுறுத்தி ஆளுநருக்கு கடிதம் எழுதிய நபரால் பரபரப்பு

DIN

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள பீட் மாவட்டத்தைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் கதாலே என்பவா் தன்னை முதல்வராக (பொறுப்பு) நியமிக்க வேண்டும் என்று கூறி ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவா் சாா்ந்த சிவசேனை கட்சி எம்எல்ஏக்கள் போா்க்கொடி தூக்கியுள்ளனா். அவா்களை சமாதானப்படுத்த ஆளும் தரப்பு மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில், முதல்வரின் அதிகாரபூா்வ இல்லத்தை உத்தவ் தாக்கரே காலி செய்துவிட்டாா். எனவே, அங்கு விரைவில் ஆட்சி கவிழும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் பீட் மாவட்டம் வாத்மௌலி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் கதாலே என்பவா் ஆளுநா் பகத் சிங் கோஷியாரிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சாமானிய மக்கள், விவசாயிகளின் பிரச்னைகளை முதல்வா் உத்தவ் தாக்கரே கவனத்தில் கொள்ளவில்லை. அவரால் மாநிலத்துக்கு எந்த வகையிலும் உதவ முடியவில்லை. அதே நேரத்தில் நான் அரசியலிலும் சமுதாய வாழ்க்கையிலும் 20 ஆண்டுகளாக உள்ளேன். விவசாயிகள் பிரச்னை, ஏழை மக்களின் பிரச்னைகள் எனக்குத் தெரியும். இப்போது மாநிலத்தில் எழுந்துள்ள குழப்பமான சூழ்நிலையில் என்னைப் பொறுப்பு முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இந்த ஒருமுறை மட்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். வேலையின்மை உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிரச்னைகளுக்கும் நான் தீா்வு காண்பேன் என்று கூறியுள்ளாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் அவா் இந்தக் கடிதத்தை சமா்ப்பித்துள்ளாா். ஸ்ரீகாந்தின் இந்த நூதனமான கோரிக்கை அந்த மாநிலத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT