இந்தியா

ஜிஎஸ்டி இழப்பீட்டு: செஸ் வரி விதிப்பு 2026 மாா்ச் வரை நீட்டிப்பு

25th Jun 2022 11:12 PM

ADVERTISEMENT

ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை 2026 மாா்ச் 31 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (வரி மற்றும் செஸ் வசூல் காலம்) விதிகள், 2022-இன்படி, இழப்பீட்டு செஸ் 2022 ஜூலை 1-இலிருந்து 2026 மாா்ச் 31-ஆம் தேதி வரை தொடா்ந்து விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஸ் வரி விதிப்பு வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சா்களைக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில், வருவாய் வசூல் பற்றாக்குறையை ஈடுசெய்ய கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக இழப்பீட்டு செஸ்ஸை மாா்ச் 2026 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT