இந்தியா

பெங்களூரு பயங்கரம்: பாட்டில்களில் பிறந்தகுழந்தைகள், பிறக்காத சிசுக்களின் உடல்கள்

25th Jun 2022 11:19 AM

ADVERTISEMENT


பெலகாவி: பெங்களூரு அடுத்த பெலகாவி பகுதியில்,  புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் 4 உடல்களும், பிறக்காத சிசுக்களின் 3 உடல்களும் பாட்டில்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கழிவுநீர் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த உடல்கள், குப்பிகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் ஒரு 5 மாதக் கரு ஒன்று, கருவில் இருக்கும் போதே பாலினம் கண்டுறியப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அதிகாரி டாக்டர் மகேஷ் கேனி தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே.. விட்டதைப் பிடித்த விக்ரம் (மாதித்தன்)? தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல்...

இது தொடர்பாக பலதுறை நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த சிசுக்களின் உடல்கள் மருத்துவமனையில் சேமிக்கப்பட்டு, பிறகு மாவட்ட அறிவியல் பரிசோதனை மையங்களுக்கு உரிய பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

ADVERTISEMENT

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 

Tags : bengaluru
ADVERTISEMENT
ADVERTISEMENT