இந்தியா

வங்கதேசத்தின் மிகப்பெரிய பாலத்தைத் திறந்துவைத்தார் ஷேக் ஹசீனா

25th Jun 2022 05:17 PM

ADVERTISEMENT

 

வங்கதேசத்தின் மிகப்பெரிய பத்மா பாலத்தை அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா  இன்று திறந்து வைத்தார். 

பத்மா ஆற்றின் மீது 6.15 கி.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சுமார் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 

வங்கதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை மற்ற பகுதிகளுடன் இந்த பாலம் இணைக்கிறது. 

ADVERTISEMENT

இதுதொடர்பாக அந்நாட்டு பிரதமர் பேசுகையில், 

இந்த பாலம் வெறும் செங்கல், சிமெண்ட், இரும்பு மற்றும் கான்கிரீட் அல்ல. இந்த பாலம் நமது பெருமை, நமது திறன், நமது வலிமை, நமது கண்ணியத்தின் சின்னம். இந்த பாலம் வங்கதேச மக்களுக்கு சொந்தமானது என்றார். 

பத்மா பாலம் கட்டுமானத்தின் தரம் தொடர்பாக எந்த சமரசமும் இல்லை. இது மிக உயர்ந்த தரத்தைப் பராமரிக்கும் வகையில் கட்டப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT