இந்தியா

பஞ்சாப்: ஐஏஎஸ் அதிகாரியின் மகன் துப்பாகியால் சுட்டு தற்கொலை

25th Jun 2022 06:18 PM

ADVERTISEMENT

 

பஞ்சாப் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லியின் மகன் தன்னைத் தானே துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். 

ஊழல் வழக்கில் கடந்த வாரம்  ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் போப்லி பஞ்சாபின் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 4வது நாளான இன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். 

“பஞ்சாப்பின் ஐஏஎஸ் அதிகாரியின் மகன் தன்னையே சுட்டுக்கொண்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினர் இவரது (சஞசய் போப்லி) வீட்டிற்கு விசாரணைகாக போகும்போது துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. விசாரித்துப் பார்க்கையில் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியில் சுட்டுக்கொண்டுள்ளார். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என எஸ்எஸ்பி குல்தீப் சஹால் கூறினார். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: வங்கதேசத்தின் மிகப்பெரிய பாலத்தைத் திறந்துவைத்தார் ஷேக் ஹசீனா

ADVERTISEMENT
ADVERTISEMENT