இந்தியா

மகாராஷ்டிரத்தில் 40 எம்எல்ஏக்கள், 70 அறைகள், 3 விமானங்கள்: எவ்வளவு செலவு?

DIN


சிவசேனையின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் அசாமில் நட்சத்திர விடுதியில் தங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருப்பதோடு, அதற்கு ஆகும் செலவை யார் செய்வது என்ற கேள்வி பல தரப்பிலிருந்தும் எழுந்துள்ளது.

சிவசேனையின் மூத்த தலைவரும் மாநில அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே 35-க்கும் மேற்பட்ட சிவசேனை அதிருப்தி எம்எல்ஏ-க்களுடன் அஸ்ஸாமின் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ளாா். அவருடன் 12 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளதாகக் கூறப்படுகிறது. தாங்கள் தான் உண்மையான சிவசேனை என ஷிண்டே கூறிவருவது மாநிலத்தில் ஆளும் மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

சிவசேனைக் கட்சியைச் சேர்ந்த 37 அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர்கள் முதலில் மகாராஷ்டிரத்திலிருந்து தனி விமானத்தில் குஜராத் சென்று அங்கு தங்கியிருந்த நிலையில், மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு தனி விமானம் மூலம் அசாம் சென்றடைந்தனர். குவகாத்தியில் தற்போது அனைவரும் தங்கியிருக்கிறார்கள்.

அனைத்து எம்எல்ஏக்களும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 70 அறைகள் ரூ.56 லட்சம் செலவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது. இந்த விடுதியில் அதிகக் கட்டணம் கொண்ட நீச்சல்குளம், உணவகங்களும் இணைந்துள்ளன.

எம்எல்ஏக்களுக்கான உணவு மற்றும் இதர சேவைகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 லட்சம் செலவாகும். இதுவும், ரூ.56 லட்சத்தையும் சேர்த்தால் 7 நாள்களுக்கு ரு.1.12 கோடியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்ல, அந்த விடுதியில் மொத்தமாக 196 அறைகள் உள்ளனவாம். அதில் 70 அறைகளை இவர்கள் முன்பதிவு செய்திருப்பதால், மற்ற அறைகளில் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சார்ட்டெர்ட் விமானக் கட்டணம் எவ்வளவு?
சூரத்திலிருந்து குவகாத்திக்கு 30 பயணிகளுடன் பயணித்த தனி விமானம், ஒரு பயணத்துக்கு ஆகும் செலவு ரூ.50 லட்சம் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்ட பிறகே, ஷிண்டே மற்றும் அதிருப்தி எம்எல்ஏக்கள் குவகாத்திக்குச் செல்ல மேலும் இரண்டு ஜெட் விமானங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்கு ரூ.33 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த செலவுகளை எல்லாம் யார் மேற்கொள்வது, கட்டணங்கள் யார் வங்கிக் கணக்கிலிருந்து செலுத்தப்படுகிறது என்று வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் கண்காணிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரத்தில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT