இந்தியா

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவர் மாணவர்கள் போராட்டம்

24th Jun 2022 05:27 PM

ADVERTISEMENT


புது தில்லி: உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அந்நாட்டில் போர் மூண்டதால், தாயகம் திரும்பிய நிலையில், நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களுக்கு சேர்க்கை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைனில் மருத்துவம் பயின்றி, நாடு திரும்பிய மாணவர்களின் கல்வியாண்டு பாதிக்கப்படாத வகையில், நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒரே ஒரு முறை சேர்க்கை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பார்க்க.. வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு - புகைப்படங்கள்

தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, இமாசலம், பஞ்சாப், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்களும் பெற்றோர்களும் புது தில்லி வந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை வழங்கவும், மருத்துவம் பயில்வதால் ஆன்லைன் கல்வி என்பது சரியாக இருக்காது என்றும் பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT