இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையம்: ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்

24th Jun 2022 10:00 PM

ADVERTISEMENT

புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் மேம்படுத்தப்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். 

இந்த தொடக்க நிகழ்ச்சியில் சரிதா கோவிந்த் உடனிருந்தார். மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால், இணையமைச்சர் மூஞ்ச்பாரா மகேந்திரபாய் காலுபாய் மற்றும் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர். குடியரசுத் தலைவர் செயலகமும், ஆயுஷ் அமைச்சகமும் இணைந்து 2015 ஜூலை 25 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆயுஷ் நல்வாழ்வு மையத்தை தொடங்கின. 

இதையும் படிக்க- மாலனுக்கு மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிப்பு

குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் செயலக அதிகாரிகள், குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியிருப்போர் ஆகியோரின் மருத்துவ தேவைகளை நிறைவு செய்ய இந்த மையத்தில் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி, இயற்கை வைத்தியம் ஆகிய சிகிச்சை வசதிகள் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT