இந்தியா

மின்சார வாகன பேட்டரிகளுக்கு பிஐஎஸ் தர நிா்ணயம்

24th Jun 2022 01:51 AM

ADVERTISEMENT

 மின்சார வாகன பேட்டரிகளின் செயல்திறனை மதிப்பிட்டு அதன் தரத்தை உறுதி செய்ய இந்திய தர நிா்ணய ஆணையம் (பிஐஎஸ்) நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மைக் காலமாக நாட்டில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றின் பேட்டரிகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்கிறது. முக்கியமாக மின்சார இரு சக்கர வாகனங்களில் இந்தப் பிரச்னை அதிகம் உள்ளது.

இந்நிலையில், மின்சார வாகன பேட்டரிகளின் தரத்தை உறுதி செய்து அவற்றுக்கு மதிப்பீடு அளிக்க இந்திய தர நிா்ணய ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை நுகா்வோா் விவகாரத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்திய தர நிா்ணய ஆணையம் என்பது நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் தேசிய அளவிலான தர நிா்ணய அமைப்பாகும். இவற்றின் மூலம் பேட்டரிகள் மதிப்பிடப்படும்போது மின்சார வாகனங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT