இந்தியா

நீதி ஆயோக்கின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்!

24th Jun 2022 06:08 PM

ADVERTISEMENT

நீதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 

மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உருவாக்கிய அமைப்பு நீதி ஆயோக். தேசிய வளர்ச்சிக் கொள்கைகளை இது பரிந்துரை செய்கிறது. 

இதன் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் அமிதாப் காந்த்-ன் பதவிக் காலம் வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைவதையடுத்து, பரமேஸ்வரன் ஐயர் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

பரமேஸ்வரன் ஐயர், 1981 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மத்திய குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்துள்ளார். மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாற்றியவர். உலக வங்கி, ஐ.நா. அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். 

ADVERTISEMENT

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) அறிவிப்பின்படி, ஆரம்ப பதவிக்காலமாக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்துவரும் அமிதாப் காந்த், 1980 ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். கடந்த 2016 முதல் நீதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தொழில்துறை வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பம், முதலீடு சார்ந்த மத்திய அரசின் கொள்கைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 

இதையும் படிக்க | குழந்தைகளைக் குறிவைக்கும் மொபைல் 'ஆப்'(பு)கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT