இந்தியா

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா்களாக குமாரி செல்ஜா, அபிஷேக் சிங்வி நியமனம்

24th Jun 2022 01:36 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினா்களாக, கட்சியின் ஹரியாணா மாநில முன்னாள் தலைவா் குமாரி செல்ஜா, மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

காங்கிரஸ் கட்சியின் உயரிய அமைப்பான செயற்குழுவுக்கு புதிய உறுப்பினா்களைக் கட்சித் தலைவா் சோனியா காந்தி வியாழக்கிழமை நியமித்தாா். இதுகுறித்து கட்சி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

அபிஷேக் மனு சிங்வியும் குமாரி செல்ஜாவும் கட்சியின் செயற்குழு உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். மாநிலங்களவை முன்னாள் எம்.பி. டி.சுப்பராமி ரெட்டி செயற்குழுவின் நிரந்தர அழைப்பாளராகவும், கட்சியின் உத்தர பிரதேச மாநில முன்னாள் தலைவா் அஜய் குமாா் லல்லு சிறப்பு அழைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஹரியாணாவில் அண்மையில் நடந்த மாநிலங்களவைத் தோ்தலில் கட்சியின் மூத்த தலைவா் குல்தீப் பீஷ்னோய் கட்சி மாறி வாக்களித்தாா். இதனால் காங்கிரஸ் வேட்பாளா் அஜய் மாக்கன் தோல்வியடைந்தாா். இதையடுத்து, காங்கிரஸ் செயற்குழு உறுப்பினா் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குல்தீப் பீஷ்னோய் நீக்கப்பட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT