இந்தியா

ஆப்கனுக்கு இந்தியா மீண்டும் உதவி

24th Jun 2022 06:17 PM

ADVERTISEMENT

 

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு மத்திய அரசு அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. 

ஜூன் 22-ல் ஆப்கானிஸ்தானைத் தாக்கிய பயங்கர நிலநடுக்கத்தை அடுத்து, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தனர். 

இதையடுத்து இந்திய அரசு, மக்களுக்கு இரண்டு விமானங்களில் 27 டன் அவசர நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. 

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானுக்கான நிவாரண உதவியில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், தூங்கும் பாய்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கும். நிவாரணப் பொருட்கள் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்திடம் (UNOCHA) ஒப்படைக்கப்படும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT