இந்தியா

ஓ. பன்னீர்செல்வத்திடம் ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு

24th Jun 2022 05:38 PM

ADVERTISEMENT

தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை, தில்லியில் உள்ள இல்லத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

பல்வேறு அரசியல் பிரச்னைகள் காரணமாக, புது தில்லி சென்றிருக்கும் ஓ. பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் திரௌபதி முர்மு, ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

ADVERTISEMENT

இதையும் பார்க்க.. வேட்புமனுத் தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு - புகைப்படங்கள்

இந்த சந்திப்பின்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்தும் உடன் இருந்தனர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT