இந்தியா

ராகுல் காந்தியின் அலுவலகம் மீது கடும் தாக்குதல்

24th Jun 2022 05:54 PM

ADVERTISEMENT

 

வயநாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கேரளம் மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

இந்நிலையில், இன்று  வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்திற்குள்  நுழைந்த சிலர் திடீரென தாக்குதல் நடத்தினர்.

ADVERTISEMENT

தாக்குதலில் அலுவலகம் அடித்து நொறுக்கப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்திய மாணவர் சங்கத்தினரே இத்தாக்குதலுக்கு காரணமானவர்கள் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT