இந்தியா

4 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா: அச்சத்தில் கேரள மக்கள்

22nd Jun 2022 12:06 PM

ADVERTISEMENT

 

கேரளத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 

இதுகுறித்து சுகாதாரத்துறை தகவலின்படி, 

மாநிலத்தில் செவ்வாயன்று புதிதாக 4,224 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 66,08,717 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

கடைசியாக கடந்த பிப்ரவரியில் ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்துக்கும் மேல் பதிவானது. இதையடுத்து இந்த ஜூன் மாதத்தில் பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

இதையும் படிக்கலாம்: ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்: 155 பேர் பலி

ஜூன் 21 நிலவரப்படி கரோனா காரணமாக புதிதாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் மொத்த உயிரிழப்புகள் 69,917 ஆகப் பதிவாகியுள்ளது. 

தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 24,333 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,464 ஆகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT