இந்தியா

பாரதிய ஜனதா அணி வேட்பாளர் வெங்கைய நாயுடு?

21st Jun 2022 01:47 PM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக  வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடுவை இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய  அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதையும் படிக்க.. வேட்பாளர் வெங்கைய நாயுடு? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

இதைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணி சார்பில் நாயுடு போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிளுடனும் பேச்சு நடத்தும் பணியை ராஜ்நாத் சிங், நட்டா ஆகியோரிடம் பாரதிய ஜனதா ஒப்படைத்துள்ளது.

இதையும் படிக்க | பா.ஜ.க. அணி வேட்பாளர் வெற்றி சாத்தியமா? குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தில்...

இன்று பின்னேரத்தில் வேட்பாளர் தெரிவு பற்றி ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. உயர்நிலைக் குழு கூடவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT