இந்தியா

ராகுல் காந்தியிடம் 5-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

21st Jun 2022 11:34 AM

ADVERTISEMENT

 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன்பாக 5-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) ஆஜராகியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, ஏற்கெனவே ஜூன் 13 முதல் 15 வரை மூன்று நாள்கள் ஆஜராகினார். 

இதையடுத்து அடுத்தகட்ட விசாரணைக்காக வெள்ளிக்கிழமை (ஜூன் 17) ஆஜராக வேண்டுமென அமலாக்கத் துறையினா் அறிவுறுத்தினா். ஆனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தில்லியில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தியின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருப்பதால், தனக்கு அவகாசம் அளிக்க வேண்டுமென ராகுல் காந்தி வேண்டுகோள் விடுதத்தன் பேரில் அவர் நேற்று  (திங்கள்கிழமை) 4-வது நாள் விசாரணைக்காக ஆஜரானார்.

ADVERTISEMENT

இந்நிலையில், 5-வது நாளாக இன்று ராகுல் காந்தி  ஆஜராகியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT