இந்தியா

தில்லியில் சட்டவிரோத ஆயுதங்களை வழங்கி வந்தவர் கைது

21st Jun 2022 12:57 PM

ADVERTISEMENT

 

சட்டவிரோதத் துப்பாக்கி விநியோகத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்த குற்றவாளியை தில்லி போலீசார் கைது செய்துள்ளனர். 

குற்றம் சாட்டப்பட்டவர், ஷேக் சஃபிகுல் என்ற சைகுல் ஆவார். கொள்ளை, வழிப்பறி, கொலை முயற்சி, கிரிமினல் தாக்குதல் மற்றும் அரசு அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு, வழிப்பறி, வீடுகளில் கொள்ளையடித்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். 

அதைத் தொடர்ந்து, ஒரு குழு அமைக்கப்பட்டு, குற்றவாளியை தில்லியின் பேருந்து நிறுத்தம் 101, பால்ஸ்வா டெய்ரி அருகே ஒரு நாட்டு கைத்துப்பாக்கியுடன் கைது செய்தனர்.

ADVERTISEMENT

இதுவும் படிக்கலாம்: பரவும் கரோனா: சென்னையிலும் முகக் கவசம் கட்டாயமா?

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் சட்டவிரோதத் துப்பாக்கி விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் தனது கூட்டாளிகள் மற்றும் அப்பகுதி குற்றவாளிகளுக்கு துப்பாக்கிகளை வழங்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் அவரிடம் 9 நாட்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு பையை மறைத்திருப்பதையும் காவல்துறை இயக்குனர் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT