இந்தியா

யோகா தினத்தைக் கொண்டாடினார் கோவா ஆளுநர்

21st Jun 2022 01:37 PM

ADVERTISEMENT

 

பனாஜி: உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது யோகா என்று கோவா ஆளுநர் பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை கூறியுள்ளார். 

ஆளுநர் மாளிகையில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் போது அவர் கூறியது, 

யோகா என்பது உலகிற்கு இந்தியா அளித்தே பரிசு. நமஸ்தே என்பது மற்றொரு நபரை மரியாதையுடன் வரவேற்கும் பாரம்பரிய இந்திய நடைமுறையாகும். இது பயிற்சியாளருக்குப் பக்தி மற்றும் நன்றியுணர்வு மனப்பான்மையை அளிக்கிறது. இந்த பாரம்பரிய கருத்து இப்போது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ADVERTISEMENT

யோகா என்பது ஒரு பழங்கால உடல், மன மற்றும் ஆன்மிக பயிற்சியாகும். 

யோகா என்பது ஒரு பழங்கால கலை. இது உடல், மனம் மற்றும் ஆன்மிக பயிற்சியாகும், இது உடலையும் உணர்வையும் சுற்றுப்புறம் மற்றும் இயற்கையுடன் ஒருமைப்படுத்துகிறது என்று பிள்ளை கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT