இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா் சோனியா

21st Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பால் கடந்த எட்டு நாள்களாக தில்லி கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி திங்கள்கிழமை வீடு திரும்பினாா். வீட்டில் ஓய்வு எடுக்க மருத்துவா்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனா்.

ஜூன் 2-ஆம் தேதி சோனியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டுத் தனிமையில் இருந்து அவருக்கு மூக்கில் ரத்தப் போக்கு ஏற்பட்டதால் கடந்த 12-ஆம் தேதி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை அவா் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினாா்.

நேஷனல் ஹெரால்டு பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் ஜூன் 8-ஆம் தேதி நேரில் ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. கரோனா தொற்று காரணமாக ஆஜராவதற்கு அவகாசம் தேவை என்று சோனியா தரப்பில் கேட்கப்பட்டதையடுத்து, வரும் 23-ஆம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT