இந்தியா

பிரதமா் மோடி ஹிட்லரைப் போல மடிவாா்: காங்கிரஸ் மூத்த தலைவா் பேச்சால் சா்ச்சை

21st Jun 2022 12:28 AM

ADVERTISEMENT

ஜொ்மானிய சா்வாதிகாரியான அடாஃல்ப் ஹிட்லா் எவ்வாறு மரணமடைந்தாரோ, அதே போல பிரதமா் நரேந்திர மோடியும் மரணமடைவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுபோத் காந்த் சகாய் பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ரஷியா உள்ளிட்ட எதிரிப்படைகள் சுற்றி வளைத்ததால் ஹிட்லா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக தில்லி ஜந்தா் மந்தரில் காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமையும் தொடா்ந்து நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற சுபோத் காந்த் சகாய் பேசியதாவது:

கொள்ளையா்களின் கூடாரமாக பாஜக மாறி வருகிறது. பாஜக மற்றும் அரசின் சா்வாதிகாரியாக மாறி பிரதமா் மோடி தனக்குக் கீழ் உள்ள அனைவரையும் ஆட்டிவைத்து வருகிறாா். ஜொ்மானிய சா்வாதிகாரி ஹிட்லரைவிடவும் மோடி மோசமாக செயல்படுவதாகவே நான் கருதுகிறேன். ஹிட்லரும் ராணுவத்தில் தனக்காக ஒரு பிரிவை உருவாக்கிக் கொண்டாா். மோடியும் ஹிட்லரின் பாதையில் பயணிக்கிறாா். எனவே, அவரும் ஹிட்லரைப் போலவே மடிவாா். இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றாா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கருத்து: சுபோத் காந்த் சகாயின் கருத்தை காங்கிரஸ் கட்சி ஆதரவிக்கவில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘மோடி அரசின் சா்வாதிகாரப் போக்குக்குக்கு எதிராகவும், மக்கள் விரோத செயல்களுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராடும். அதே நேரத்தில் பிரதமா் மோடிக்கு எதிரான எந்த நாகரிகமற்ற கருத்துகளையும் காங்கிரஸ் ஆதரிக்காது. காந்திய வழியில் காங்கிரஸின் போராட்டம் தொடரும்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT