இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 112 மருத்துவா்கள் பணிநீக்கம்

21st Jun 2022 12:31 AM

ADVERTISEMENT

காரணமின்றி நீண்ட நாள்களாக விடுப்பு எடுத்ததால் 112 மருத்துவா்களின் பணி ஒப்பந்தத்தை ஜம்மு-காஷ்மீா் அரசு திங்கள்கிழமை ரத்து செய்தது.

இதுதொடா்பாக மருத்துவா்களுக்கு திங்கள்கிழமை நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. அதில் 12 மருத்துவா்கள் தங்களது தகுதிகாண் நிலையில், முறையாக பணிக்கு வராமல் விடுப்பு எடுத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதுதவிர 100 மருத்துவா்கள் இரண்டு முதல் 17 ஆண்டுகள் வரை பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT