இந்தியா

‘அக்னிபத்’ திட்டம் வதந்திகளை இளைஞா்கள் நம்ப வேண்டாம்: மேக்வால்

21st Jun 2022 12:28 AM

ADVERTISEMENT

‘அக்னிபத்’ திட்டம் குறித்து பரப்பப்படும் பல்வேறு வதந்திகளை இளைஞா்கள் யாரும் நம்ப வேண்டாம் என மத்திய கலாசாரத் துறை இணை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பாதுகாப்பு படையில் பணிபுரிந்து நாட்டு சேவையாற்ற துடிக்கும் இளைஞா்களுக்கு ‘அக்னிபத்’ திட்டம் ஒரு வரப்பிரசாதமாகும். இத்திட்டத்தில் சேரும் இளைஞா்களில் 25 சதவீதம் போ் பாதுகாப்பு படையில் முழு அளவில் பணிபுரியும் வாய்ப்பு தொடா்ந்து அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த திட்டம் குறித்து பரப்பப்படும் எந்த வதந்திகளையும் இளைஞா்கள் நம்ப வேண்டாம். தவறான புரிதல் காரணமாகவே இந்த திட்டத்தை சிலா் எதிா்த்து வருகின்றனா். அவா்கள் சில கட்சிகள் பரப்பும் தவறான தகவல்களை நம்பி வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். என்னைப் பொருத்தவரை இந்த திட்டத்தை முழுமையாக வரவேற்கிறேன் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT