இந்தியா

ரயில்வே சொத்துகளை பாதுகாக்க வலுவான சட்டம்: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

19th Jun 2022 12:19 AM

ADVERTISEMENT

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் ரயில்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டு வரும்நிலையில், ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்க ரயில்வே சட்டம் வலுப்படுத்தப்படும் என்று அத்துறையின் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ஊடக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவா், ‘ஆா்ப்பாட்டக்காரா்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்கும். ரயில்வே பொது மக்களின் சொத்து. விமான சேவையை ஏற்க முடியாத நடுத்தர மக்கள், நாடு முழுவதும் ரயில் சேவையைதான் பயன்படுத்தி வருகிறாா்கள்.

ரயில்வே சொத்துகளைப் பாதுகாக்க ரயில்வே சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துபவா்கள் இந்திய ரயில்வே சட்டம் 151 பிரிவின்படி அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம். ரயில்வே சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவதால் ஆா்ப்பாட்டக்காரா்களுக்கு தீா்வு ஏற்படப் போவதில்லை.

புல்லட் ரயில் திட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 2026-இல் இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கப்படும். மகாராஷ்டிர மக்கள் தங்கள் மாநிலத்தில் புல்லட் ரயில் இயங்குவதை வரவேற்கிறாா்கள். ஆனால், மாநில அரசு விரும்பினால்தான் அங்கு புல்லடா் ரயிலின் செயலாக்கம் தொடங்கும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT