இந்தியா

அக்னிபத்: ராஜ்நாத் மீண்டும் ஆலோசனை

19th Jun 2022 11:15 AM

ADVERTISEMENT


நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணியாற்ற வாய்ப்பளிக்கும் அக்னிபத் திட்டத்தை மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இளைஞர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். பல இடங்களில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் வீரர்களில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணியில் தொடர்வார்கள், மற்றவர்களுக்கு கட்டாய ஓய்வளிக்கப்படும்.

இதையும் படிக்கஅக்னிபத்’ திட்டத்தைக் கைவிட தலைவா்கள் வலியுறுத்தல்

ADVERTISEMENT

மேலும், அவர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியப் பலன்கள் எதுவும் கிடைக்காது. இதனால், தங்களது எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பும் இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.

இளைஞர்களின் போராட்டத்தைத் தணிக்க, ஆளும் தரப்பு எடுத்த முயற்சிகள் எதுவும் பெரிதும் பலனளிக்கவில்லை. 

அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அக்னி வீரர்களுக்கு மத்திய பாதுகாப்பு, உள்துறை அமைச்சகங்களில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை, பாதுகாப்பு அமைச்சகங்கள் அறிவித்துள்ளன. வரும் காலங்களில் பல்வேறு அரசாங்கங்கள் மற்றும் அமைச்சகங்களிடமிருந்து வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அறிவிப்பைக் கேட்க்கலாம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், போராட்டங்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது இல்லத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டு நாள்களில் நடைபெறும் இரண்டாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Agnipath
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT