இந்தியா

நடுவானில் தீப்பிடித்த விமானம்: உயிர் தப்பிய 185 பயணிகள்

19th Jun 2022 03:25 PM

ADVERTISEMENT

185 பயணிகளுடன் தில்லி நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாட்னாவில் இருந்து தில்லி நோக்கிச் சென்ற விமானத்தில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினை அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்களது செல்லிடப்பேசியில் விடியோவாக பதிவு செய்தனர். அந்த விடியோவில் விமானத்தின் இடதுபுறத்தில் உள்ள இன்ஜினில் இருந்து தீப்பொறி வெளிவரும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

விமானத்தில் தீப்பிடித்ததை அறிந்த உடன் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறினர்.

இந்த விபத்து குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “ பாட்னாவிலிருந்து தில்லி நோக்கிச் செல்லும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் இடதுபக்க இன்ஜின் நம்பர் 1-ல் பறவை மோதியதால் தீப்பொறி வந்துள்ளது. இதனால் விமானத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விமானத்தினை உடனடியாக தரையிறக்குமாறு அறிவுறுத்தியதால் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. விமானத்தினை சோதித்தபோது என்ஜினில் பறவை மோதியதில் இறக்கை சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்” என்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT