இந்தியா

தங்கப்பத்திர வெளியீடு: கிராம் ரூ.5,091-ஆக நிா்ணயம்

19th Jun 2022 01:24 AM

ADVERTISEMENT

நடப்பு நிதியாண்டுக்கான முதல்கட்ட தங்கப்பத்திர வெளியீடு திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிலையில், அதன் விலை கிராமுக்கு ரூ.5,091-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது:

முதல் கட்ட வெளியீடு: நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான முதல்கட்ட தங்கப்பத்திர வெளியீடு திங்கள்கிழமை (ஜூன் 20) தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் (ஜூன் 24) நிறைவடையவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.5,091-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.50 தள்ளுபடி: மத்திய அரசுடன், ரிசா்வ் வங்கி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் ஆன்லைன் முறையில் தங்கப்பத்திரங்களை வாங்க விண்ணபித்து எண்ம முறையில் பணம் செலுத்தும் முதலீட்டாளா்களுக்கு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவ்வகையான முதலீட்டாளா்களுக்கு ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.5,041 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.

நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் கட்ட தங்கப்பத்திர விற்பனை ஆகஸ்ட் 22 முதல் 26 வரையில் நடைபெறவுள்ளது.

8-ஆண்டு முதிா்வு காலம்: இக்கடன்பத்திரங்களுக்கான முதிா்வு காலம் எட்டு ஆண்டுகள் ஆகும். ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டாளா்கள் இந்த திட்டத்திலிருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் 4 கிலோ: இத்திட்டத்தில் தனிநபா் ஒருவா் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரையிலான தங்கப்பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதற்கு ஆண்டுக்கு நிலையான அளவில் 2.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

வங்கிகள்: பங்குச் சந்தை, அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் மூலமாக தங்கப்பத்திரங்கள் விற்பனை செய்யப்படும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தங்கத்தின் நேரடி பயன்பாட்டை குறைத்து உள்நாட்டு சேமிப்பை ஊக்குவிக்கும் விதத்தில் கடந்த 2015 நவம்பரில் மத்திய அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

கோட்ஸ்

நடப்பு 2022-23 நிதியாண்டுக்கான முதல்கட்ட தங்கப்பத்திர வெளியீடு ஜூன் 20 -இல் தொடங்கி 24-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இந்த கட்டத்தில் வெளியிடப்படும் தங்கப்பத்திரத்தின் விலை கிராம் ரூ.5,091-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT