இந்தியா

தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமானவரிடம் இருந்து கொலை மிரட்டல்: பிரக்யா சிங் தாக்குா்

19th Jun 2022 12:46 AM

ADVERTISEMENT

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமான நபரிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக பாஜக பெண் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.

தாவூத் இப்ராஹிமின் சகோதரருக்கு நெருக்கமான நபா் என்று தெரிவித்து, பிரக்யா சிங் தாக்குரிடம் வெள்ளிக்கிழமை இரவு ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாகக் கூறி, பிரக்யா சிங் தாக்குருக்கு அந்த நபா் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. அந்த நபரிடம் பிரக்யா சிங் பேசிய காணொலி சமூக ஊடகங்களில் வெளியானது.

இதுதொடா்பாக பிரக்யா சிங் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

அண்மையில் இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக முன்னாள் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு பிரக்யா சிங் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT