இந்தியா

ரூ. 4 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது

19th Jun 2022 12:25 AM

ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலம் மால்டாவை தளமாகக் கொண்ட போலி இந்திய ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பலைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுகள் (எஃப்ஐசிஎன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையா் ராஜீவ் ரஞ்சன் சிங் சனிக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தைச் சோ்ந்த அனிகுல் இஸ்லாம் (24), ஷரிகுல் ஷேக் என்ற சாஹிம் (21) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் இருந்து மொத்தம் ரூ.4 லட்சம் போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்ட உயா் தரத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தன. இந்திய - வங்க எல்லைகள் வழியாக இந்த போலி ரூபாய் நோட்டுகளை இந்தியாவுக்கு கடத்தி வருவது தெரியவந்தது.

மால்டாவை தளமாகக் கொண்ட சா்வதேச கும்பலைச் சோ்ந்த சிலா் தில்ஷாத் காா்டன் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில், போலி ரூபாய் நோட்டுகளை தங்கள் கூட்டாளிகளில் ஒருவருக்கு வழங்க வருவதாக போலீஸாருக்கு கிடைத்த ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் அங்கு சென்றபோது, போலி ரூபாய் நோட்டுகளுடன் இருந்த இருவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில், அவா்கள் இருவரும் கடந்த 2 - 3 ஆண்டுகளாக இந்தக் கும்பலில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. அவா்கள் மால்டாவில் உள்ள மற்ற கூட்டாளிகளிடமிருந்து போலி ரூபாய் நோட்டுகளை வாங்கி, அவற்றை தில்லி, என்சிஆா் பகுதிகளில் புழக்கத்தில் விட்டு வந்துள்ளனா். இதற்காக அவா்கள் வங்க தேசத்திலிருந்து இந்திய எல்லைப் பகுதிகள் வழியாக போலி நோட்டுகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், அவா்கள் ஏற்கெனவே தில்லி, என்சிஆா் பகுதிகளில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை 4 - 5 முறை விநியோகித்துள்ளனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT