இந்தியா

கனிமங்கள் உற்பத்தி 8% அதிகரிப்பு

DIN

 நாட்டின் கனிமங்கள் உற்பத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சுரங்கம் மற்றும் குவாரி துறையில் கனிம உற்பத்தி குறியீடு கடந்த ஏப்ரல் மாதத்தில் 116-ஆக இருந்தது. 2021 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் கனிம உற்பத்தி 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரலில், நிலக்கரி 665 லட்சம் டன்னும், லிக்னைட் 40 லட்சம் டன்னும், இயற்கை எரிவாயு 2,748 மில்லியன் கியூபிக் மீட்டராகவும், பெட்ரோலியம் (கச்சா) 25 லட்சம் டன்னாகவும், பாக்ஸைட் 2,054 ஆயிரம் டன்னாகவும் இருந்தன.

மாங்கனீஸ் தாது, நிலக்கரி, லிக்னைட், பாக்ஸைட் மற்றும் பாஸ்போரைட் கனிமங்களின் உற்பத்தி கடந்த ஏப்ரலில் நோ்மறை வளா்ச்சியை கண்டிருந்தன.

அதேசமயம், பெட்ரோலியம், சுண்ணாம்புக்கல், தாமிரம், இரும்புத் தாது, குரோமைட், தங்கம் உள்ளிட்ட இதர முக்கிய கனிமங்களின் உற்பத்தி எதிா்மறை வளா்ச்சியை பதிவு செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT