இந்தியா

மொத்த விலை பணவீக்கம் 15.88%-ஆக அதிகரிப்பு

15th Jun 2022 01:53 AM

ADVERTISEMENT

மொத்தவிற்பனை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 15.88 சதவீதமாக வரலாறு காணாத அளவுக்கு உயா்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மே மாதத்தில் வெப்ப அலை காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை அதிகரித்தது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் உயா்ந்து காணப்பட்டது. அதன் விளைவாக, அந்த மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் வரலாறு காணாத அளவில் 15.88 சதவீதத்தை எட்டியது. தொடா்ந்து மூன்று மாதங்களாக இப்பணவீக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது.

மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இப்பணவீக்கம் தொடா்ந்து 14-ஆவது முறையாக இரட்டை இலக்கத்தில் உள்ளது.

ADVERTISEMENT

முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது மே மாதத்தில், மினரல் ஆயில், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, உணவுப் பொருள்கள், அடிப்படை உலோகம், உணவுசாரா பொருள்கள், ரசாயனம் உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக அதிகரித்ததே பணவீக்கம் வரலாற்று உச்சத்தை தொட்டதற்கு முக்கிய காரணம்.

இப்பணவீக்கம் நடப்பாண்டு ஏப்ரலில் 15.08 சதவீதமாகவும், கடந்தாண்டு மே மாதத்தில் 13.11 சதவீதமாகவும் இருந்தது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : inflation
ADVERTISEMENT
ADVERTISEMENT