இந்தியா

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்: நேரில் நலம் விசாரித்தார் முதல்வர்

15th Jun 2022 07:03 PM

ADVERTISEMENT

 

சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், முதல்வர் பூபேஷ் பாகல் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

சத்தீஸ்கா் மாநிலம் ஜஞ்சீா் சம்பா மாவட்டம் பிரீத் கிராமத்தைச் சோ்ந்த ராகுல் சாஹு என்ற 11 வயது சிறுவன், தனது வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தார்.

படிக்கஅக்னி வீரர்களுக்கு முன்னுரிமை: யோகி ஆதித்யநாத்

ADVERTISEMENT

கிணற்றில் சுமாா் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருந்தனா். அவனுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வந்தது.

104 மணி நேர ( 4 நாள்கள் 8 மணி நேரம்) போராட்டத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை இரவு உயிருடன் மீட்கப்பட்டார். மேலும், அவர் பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சிறுவன் ராகுலை முதல்வர் பூபேஷ் பாகல் நேரில் சென்று நலம் விசாரித்தார். ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். சிறுவனின் தாயாருன் உடன் இருந்தார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT