இந்தியா

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் அருங்காட்சியகம்

15th Jun 2022 12:38 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிர ஆளுநா் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரா்களின் சுரங்க அருங்காட்சியகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

முதலாம் உலகப் போருக்கு முன்னதாக ஆங்கிலேயா்களால் அமைக்கப்பட்ட 13 பதுங்கு குழிகளை கடந்த 2016, ஆகஸ்டில் அந்த மாநில ஆளுநராக வித்யா சாகா் ராவ் இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பதுங்கு குழிகளில் சுதந்திரப் போராட்ட வீரா்களின் சிலைகள், அரிய புகைப்படங்கள், பள்ளிக் குழந்தைகளின் ஓவியங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அருங்காட்சியகமாக திறக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

Tags : pm modi
ADVERTISEMENT
ADVERTISEMENT