இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல்: தில்லியில் எதிர்க்கட்சிக் கூட்டம் தொடங்கியது

15th Jun 2022 04:18 PM

ADVERTISEMENT

எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்யும்பொருட்டு அதுகுறித்து ஆலோசனை நடத்த மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி ஏற்பாடு செய்துள்ள கூட்டம் தில்லியில் தொடங்கியது. 

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், சிவசேனை, மக்கள் ஜனநாயகக் கட்சி, திமுக உள்ளிட்ட 16 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

குடியரசுத் தலைவா் தோ்தல் வரும் ஜூலை 18-இல் நடைபெறுகிறது. இதில் நியமன உறுப்பினா்கள் தவிர எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வாக்களிக்க தகுதி பெற்றவா்கள். ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஏறத்தாழ 50 சதவீத வாக்குகள் உள்ளதாலும், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், ஆளும்கட்சி நிறுத்தும் வேட்பாளா் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க |  குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவு!

ADVERTISEMENT

அதேவேளையில், எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து போட்டி வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் இந்தத் தோ்தலில் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும். அந்த வகையில், எதிா்க்கட்சி தரப்பில் பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்காக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சிபிஐ (எம்) பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 22 கட்சித் தலைவா்களுக்கு மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி அண்மையில் கடிதம் எழுதினாா். அதில், ஜூன் 15-இல் தில்லியில் கூடி, எதிா்க்கட்சி வேட்பாளா் குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க | குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் முக்கிய கட்சிகள்?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT