இந்தியா

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை

15th Jun 2022 11:10 AM

ADVERTISEMENT

 

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்கிற்காக காஷ்மீரின் பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியாக பயங்கரவாத அமைப்பிற்கு நிதியுதவி செய்த வழக்கில் இன்று அம்மாநிலத்தைச் சேர்ந்த பரமுல்லா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக பயங்கரவாத நடவடிக்கைகள் தொடா்பாக காஷ்மீரின் பாரமுல்லா, குப்வாரா, புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையின்போது பாரமுல்லாவைச் சோ்ந்த முசாமில் முஷ்தாக் பட், குப்வாராவைச் சோ்ந்த ஃபையாஸ் அகமது கான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இருவரும் டிஆா்எஃப் அமைப்புடன் சோ்ந்து செயல்பட்டு வந்துள்ளனா். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடா்பிலிருந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்களுக்கு ஏற்பாடு செய்தல், பயங்கரவாதம் குறித்து பரப்புரை செய்தல், டிஆா்எஃப்பில் புதிய நபா்களைச் சோ்த்தல் ஆகிய செயல்களில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனா்.

ADVERTISEMENT

பாகிஸ்தானில் உள்ள லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் நிழல் அமைப்பாக டிஆா்எஃப் செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT